Wednesday, December 29, 2010

மீன் சுவாசம்

என்னுடன் பேச வேண்டும்
என்றாயாமே  .. நீ.

ஆமாம் .. நான்.

என்ன பேச..
நான் நிஜத்தில் வாழ்பவள்
நீ கற்பனாவாதி.
உனக்கு புளிய மரத்தில்
புளோரசென்ட் பூக்கள் பூக்கும்
எனக்கு அது
மொட்டை மரம்..

நீ விண்மீனுக்கு தூண்டிலிட
பார்ப்பவன்..
நிலவை நான் என்பாய்.

இன்னும் என்ன
என்ன சொன்னாய் என
கவனிக்கவில்லை.

உன் உதடுகள்
ஒட்டி பிரிவது...
சிறுவயதில்
ஒரு பணக்கார வீட்டு
மீன் தொட்டியில் பார்த்த 
மீன்களின் சுவாசம்.
நினைவு...

கிளம்பு முன்..
 நீ திருந்த மாட்டாய்..
திருந்தினால் நீ இல்லை என்றாய்....


வேலன்.