என்னுடன் பேச வேண்டும்
என்றாயாமே .. நீ.
ஆமாம் .. நான்.
என்ன பேச..
நான் நிஜத்தில் வாழ்பவள்
நீ கற்பனாவாதி.
உனக்கு புளிய மரத்தில்
புளோரசென்ட் பூக்கள் பூக்கும்
எனக்கு அது
மொட்டை மரம்..
நீ விண்மீனுக்கு தூண்டிலிட
பார்ப்பவன்..
நிலவை நான் என்பாய்.
இன்னும் என்ன
என்ன சொன்னாய் என
கவனிக்கவில்லை.
உன் உதடுகள்
ஒட்டி பிரிவது...
சிறுவயதில்
ஒரு பணக்கார வீட்டு
மீன் தொட்டியில் பார்த்த
மீன்களின் சுவாசம்.
நினைவு...
கிளம்பு முன்..
நீ திருந்த மாட்டாய்..
திருந்தினால் நீ இல்லை என்றாய்....
வேலன்.
6 comments:
Nice one
சிரிக்கிறாய்,முறைத்தாவது பார்,மீன் சுவாசம் எல்லாம்
புன்னகையை வரவழைத்த நல்ல கவிதைகள். இன்னும்
கல்யாணம் பண்ணலைன்னு நினைக்கிறேன். அதனால்தான்
காதல் கவிதையெல்லாம் எழுத முடிகிறது :)
//நீ விண்மீனுக்கு தூண்டிலிட
பார்ப்பவன்..
நிலவை நான் என்பாய்.//
சூப்பர் ஹைக்கூ கவிதைபோல இருக்கு வாழ்த்துகள் வேலன்....
பின்னூட்டங்களுக்கு நன்றி.
nice one
சார் ஞாயிற்று கிழமை மதுரை பதிவர்கள் ஒன்றாக சந்திக்கவிறுக்கிறோம் ,விருப்பமிருந்தால் நீங்களும் வரலாம் .எனது ப்ளோகில் என் செல் நம்பர் உள்ளது ,விருப்பமிருந்தால் போன் செய்யுங்கள்
கவிதை நன்றாகவுள்ளது நண்பா.
Post a Comment