Wednesday, December 29, 2010

மீன் சுவாசம்

என்னுடன் பேச வேண்டும்
என்றாயாமே  .. நீ.

ஆமாம் .. நான்.

என்ன பேச..
நான் நிஜத்தில் வாழ்பவள்
நீ கற்பனாவாதி.
உனக்கு புளிய மரத்தில்
புளோரசென்ட் பூக்கள் பூக்கும்
எனக்கு அது
மொட்டை மரம்..

நீ விண்மீனுக்கு தூண்டிலிட
பார்ப்பவன்..
நிலவை நான் என்பாய்.

இன்னும் என்ன
என்ன சொன்னாய் என
கவனிக்கவில்லை.

உன் உதடுகள்
ஒட்டி பிரிவது...
சிறுவயதில்
ஒரு பணக்கார வீட்டு
மீன் தொட்டியில் பார்த்த 
மீன்களின் சுவாசம்.
நினைவு...

கிளம்பு முன்..
 நீ திருந்த மாட்டாய்..
திருந்தினால் நீ இல்லை என்றாய்....


வேலன்.

Saturday, August 21, 2010

தினங்கள்

இந்த அரசாங்கம்
ஒரு குப்பை.

குழந்தைகள் தினம்
குடியரசு தினம்
என்று ஏதேதோ
அறிவிக்கிறது.

உன் பிறந்த நாளை

நிலா பூமிக்கு
வந்த தினமாய்

அறிவிக்க என்ன தயக்கம்...?



வேலன்.

Sunday, August 15, 2010

இந்திரையோ இவள் சுந்தரியோ..

தெய்வ ரம்பையோ ஊர்வசியோ..


இதை திரைப் பாடலாய் கேட்டிருக்கிறேன்

குற்றால குறவஞ்சியில் படித்திருக்கேன்.


அர்த்தம் புரிந்து

உணர்ந்தது

உன்னைப்  பார்த்த நாளில்...



இப்போது

குற்றால குறவஞ்சி படித்தாலே

வசந்த வல்லிக்கு பதிலாய்

உன்னை எண்ணி கொள்கிறேன்.

Saturday, July 31, 2010

நிலா... கனவு...
முத்தம்...
தென்றல்... காதல் ...
இது இல்லாமல்
கவிதை எழுதவே முடியாதா?

யோசித்துப் பார்த்தேன்...



இருந்து விட்டு போகட்டுமே
இவை.. 

சஹஸ்ரநாமம் போல
உன்னுடைய பெயர்களில் சில.



வேலன்

Monday, July 26, 2010

கவி எழுது

ஒரு தோழமையில் அறிவுரை
காதலை பற்றி மட்டும்
எழுதாமல்
சற்று இயற்கையை எழுதுஎன...

இயற்கையும் செயற்கையும்
யோசனையும் மறப்பும்
நீயாகி போனதால்

எனக்காக எழுதேன்
ஒரு கவி.

Thursday, July 15, 2010

சிரிக்கிறாய்

நீண்ட நாட்களுக்கு பிறகு
எனது நகைச்சுவைக்கு
சிரிக்கிறாய்...

அப்படியே
காதலித்தும் விடேன்.

Wednesday, July 7, 2010

முறைத்தாவது பார்

கோபத்தில் முறை..
எரிச்சலில் கண்களால் எச்சரி..
சோகத்தில் கண்களில்
நீர் தளும்பு.

எதுவாயினும்
/*உன் அருகாமை தேடிவந்த */
என்னை
ஒரு தரமேனும் பார்.

உன்னை சார்ந்த காதல்

தோல்வியில் தான்
கவிதை வருமென்றால்
எனக்கு கவிதையே வேண்டாம்.

இப்போதும் கூட பாரேன்
எனக்கு காதல் வேண்டாமென
சொல்ல முடியவில்லை.

ஏனெனில்
காதல் உன் சார்ந்த
விஷயமாகி போனது.

வேலன்

எந்த மொழி

தமிழை காதலிக்கலாம்
ஆனால்
தமிழே என் காதலியை
இருக்க..
எந்த மொழியில் நான்
என் காதல் சொல்ல.

வேலன்.

ஈரம்

முத்தமிட்ட ஈரம் காயுமுன்
ரத்தக் குழல்
கருக வைத்தது
உன் காதலாய் தான்
இருக்கும்.

காதலிக்கத் தான்

உன்னை பார்க்கும் போதெல்லாம்
தோன்றும் எண்ணம்...

"என் பிறப்பே
உன்னை காதலிக்க தானோ"

வேலன்.

தமிழ் கற்றுக் கொள்கிறேன்

தமிழ் கற்று கொள்கிறேன்...
அரைகுறையாய்
அது ஒன்று தான் தெரியும்.

அதை வைத்தாவது
உன்னைக் கவர முடியுமா
என்றொரு

நப்பாசை.


வேலன்

முடியா கவிதை

இங்கு தான் இருக்கிறேன்
என் இதயம் மட்டும்
ஏதோ ஓர் ஏகாந்த வெளியில்...



உன்னோடு தான் என்று
சொன்னால் தான்
இந்த கவிதை முடியுமா.

காதலிக்கலாம் வா.

போதுமடி நான்
கவிதை எழுதி கிழித்தது
காதலிக்கலாம் வா.

ஒற்றைக்கால் தவம்

எதையும் பொறுமையாய்
செய்ததில்லை.
பள்ளி நாட்களிலும்...
வேலைக்கு செல்லும்போதும்...
ஆனால்
நீ கடந்துபோகும் நொடிக்கு
இருமணி நேரம்
ஒற்றைக்கால் தவம் இருக்கிறேன்.

வேலன்.

திருவீதி உலா
பார்த்திருப்போம்.
என் வீதியில் நீ
போனது
நிலாவீதி உலா.

Friday, March 19, 2010

கால வேகம்

இது 2001 ஜனவரி ஒன்றாம் தேதி எழுதியது.

காலம் வேகமாய் ஓடுகிறது.
நீ
என் இதயத்தில்
பதித்த தடம் பதிகிறது
இன்னும்
அழுத்தமாய் அழுத்தமாய்.....
அன்பு தமிழ் நெஞ்சங்களே. மற்றுமொரு வலைப்பதிவு உங்களுக்காக. என்னை பற்றி - நான் மதுரையில் வாழும் ஒரு மிக சாதாரணன். Life is beautiful என்று ஒவ்வொருவருக்கும் உரத்து சொல்லும் ஒருவனின் என்ன சிதறல்கள் இது. படித்து பாருங்கள் உங்கள் கருத்துகளை பதியுங்கள்.